திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருக்கோவிலில் அமைந்துள்ள பெரியநந்தி, சிறிய நந்தி, அதிகார நந்தி, பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட16 வகை அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
மார்கழி மாத பிரதோஷ வழிபாட்டின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.