அண்ணாமலையார் மகா ரதத்தினை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தரிசனம்

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7ம் நாள்ளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம் நடைபெறுகின்றது. இன்று காலை 6.45 மணியளவில் விநாயகர் தேரும், அதன் பின்பு முருகர் தேர் மாடவீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தது.

மதியம் 3 மணியளவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான அண்ணாமலையாரின் மகா ரத தேரோட்டம் தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

இதில் மழை என்றும் பாராமல் மழையில் நனைந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலைக்கு அரோகரா என்று முழக்கமிட்டு அண்ணாமலையார் தேரை வடம் பிடித்து இழுத்து மாடவீதிகளில் வலம் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவு அம்மன் தேர் மாட வீதி உலா வந்தது. அம்மன் தேரை முற்றிலும் பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
அம்மன் தேர் பின் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தேர் மாட வீதி வலம் வரவில்லை. இந்த ஆண்டு தேர் திருவிழாவை ஒட்டிதிருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். மகா ரத தேர் திருவிழாவினையொட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வருகின்ற 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையிலன் மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது.

மலை மீது ஏற்பட உள்ள தீபத்திற்கு தீப கொப்பறையில் 4500 கிலோ நெய் நிரப்பி சுமார் 2500 மீட்டர் காடா துணி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட உள்ளது. 6ம் தேதி ஏற்றப்பட்ட தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

அதன் பின்னர் தீப கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கொப்பரையில் இருந்து நெய் சேகரித்து அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Explore additional categories

Block title

error: Content is protected !!