தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவண்ணாமலை வேங்கிகாலில் அமைந்துள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திரு உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோன்று திருவண்ணாமலை நகர அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகில் நகர மன்ற 5வது வார்டு உறுப்பினர் சிவில் சீனிவாசன் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுரு படத்திற்கு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தி 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
உடன் மாவட்ட அவை தலைவர் நாராயணன், திருவண்ணாமலை நகரச் செயலாளர் ஜெ. செல்வம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ எஸ். குணசேகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், திருவண்ணாமலை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் ரேடியோ ஆறுமுகம், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தரணிதரன், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.