திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டியும் திருவண்ணாமலை நகர அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவரது உரையில் விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற 19 மாதங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றும், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கி வருவதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்று தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் தற்போது திறப்பு விழா கண்டு வரும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து முடிவுற்ற பணிகளுக்கு மட்டுமே தற்போது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா கண்டு வருவதாக கடும் கண்டனம் தெரிவித்தவர்.
மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சிறிதும் யோசிக்காமல் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட திருவிழாவில் திமுக அரசின் அலட்சியத்தால் நகராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த வசதிகளையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டியதோடு அறநிலையத்துறை அதிகாரிகளோடு சேர்ந்து இலவசமாக வழங்க வேண்டிய பாஸ் அனுமதி அட்டைகளை திமுக நிர்வாகிகள் ரூபாய் 2000 முதல் ஐந்தாயிரம் வரையில் விற்பனை செய்து கொள்ளையடித்துள்ளனர்.
கள்ளச் சந்தனையில் இலவச பாஸ் அனுமதி அட்டைகளை விற்பனை செய்த வீடியோ அனைத்தும் ஊடகங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வெளிவந்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்த நபர்களை உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமிகாந்தன், மாவட்ட ஒன்றிய பேருர் வட்ட கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.