திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி 1 முதல் தமிழர்களின் தைப்பொங்கல் திருநாள் வரை காளை மாடுகள் விடும் விழா விழாக்குழுவின் சார்பில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுற்றுப்பகுதியில் உள்ள கொட்டாவூர், பரமனந்தல், செங்கம், புதுப்பாளையம், காரப்பட்டு, கடலாடி, புதூர் செங்கம், ஆதமங்கலம்புதூர், வீரலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்று வீதியில் சீறிப்பாய்ந்து ஓடியது.
மேலும் காளை மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை சிறப்பு பூஜை செய்து வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய அனைத்து காளை மாடுகளை மாடுபிடி வீரர்கள் வீதியில் களமிறங்கி சீறிப்பாய்ந்து ஓடிய காளை மாடுகளை பிடிக்க முயன்ற காட்சிகளை பல்வேறு கிராமத்தில் இருந்து கலந்துகொண்ட பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு காளைகளையும் இளைஞர்களையும் ஊக்கப்படுத்தினார்கள்.