திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் ஜோதி வடிவமாக தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். 11 நாட்கள் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து ஐந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கொப்பறையில் பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு திலகமாக வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்திய வர்களுக்கும் தீப மையானது வழங்கப்படும். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனார்.