மகா தீபக் கொப்பரை 2668 அடி மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாகடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழாவின்
முக்கிய நிகழ்வான டிசம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் ஜோதி வடிவமாக தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

11 நாட்கள் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்துஇன்று காலை ஐந்தே முக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்துகோவில் பணியாளர்கள் 20 மேற்பட்டோர் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கொண்டு வர பட்டது.

மேலும் 11 நாட்கள் கொப்பரையில் ஏற்றப்பட்ட நெய் மைய் ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். மேலும் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலித்தியவர்களுக்கு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Explore additional categories

Block title

error: Content is protected !!