பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கார்த்திகை மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும்பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றதையொட்டிபல லட்ச பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் நேற்று கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அண்ணாமலையார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி மாலை நிறைவு பெற்றது. இதில் 2 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 669 ரூபாய் மற்றும் 228 கிராம் தங்கமும், 1478 கிராம் வெள்ளியும், இன்று இரண்டாவது நாள் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 45 லட்சத்து 823 ரூபாய், தங்கம் 50 கிராம், வெள்ளி 783 கிராம், பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். திருக்கோவிலின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.