திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 10ம் நாள் அதிகாலை பரணி தீபமும் மாலை 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் விற்பனை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை 24.11.2023 அன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் முன்பதிவு துவங்க உள்ளது. இதற்காக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இணையதள https://annamalaiyar.hrce.tn.gov.in முகவரியில் முன்பதிவு தொடங்க உள்ளது. பரணி தீப தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ரூபாய் 500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும் மாலை மகா தீபத்தை காண ரூபாய் 600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும் ரூபாய் 500 கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

  1. கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
  2. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்யமுடியும்.
  3. கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் OTP குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணிற்கு வரும்.
  4. கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  5. ஆன்லைன் மூலம் கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணிதீபம் தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்கள் 26.11.2023 அன்று அதிகாலை 02.00 மணிமுதல் 03.30 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  6. ஆன்லைன் மூலம் கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்யப்பட்டு மகாதீபம் தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்கள் 26.11.2023 அன்று மாலை 02.00 முதல் 03.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  7. மேற்கண்ட இரண்டு தீபநிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார்கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இத்திருக்கோயில் கிழக்கு ராஜ கோபுரம் (திட்டி வாயில்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
  8. குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகைதர தவறும் பக்தர்களை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Explore additional categories

Block title

error: Content is protected !!