திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கலசப்பாக்கம் மற்றும் செங்கம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ மற்றும் தெற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும் கழக அமைப்புச் செயலாளருமான மதுக்கூர் துரை செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன் பூத் கமிட்டி படிவம், மகளிர் அணி படிவம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளை முழுமையாக நிறைவேற்றி தந்த ஒன்றிய செயலாளர்கள் பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் நாராயணன், மாநிலமகளிர் அணிதுணைச் செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் எம்.எஸ். நைனா கண்ணு, ஒன்றிய செயலாளர்கள், மகரிஷி மனோகரன், ராஜா(எ) தேவராஜன், அசோக், அருணாச்சலம், கார்த்திகேயன், வெள்ளையன், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், அன்பழகன், மூர்த்தி, பேரூராட்சி செயலாளர்கள் ஆனந்தன், ராதா மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.