திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரம் முன்னிட்டு பெண்கள் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திலிருந்து 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் அர்ச்சனை மகாதீபாரதனை அதனைத் தொடர்ந்து பெண்கள் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் அதிமுக கீழ்பென்னாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அரங்கநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஆனந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.