திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவிகாபுரம் பகுதியில் இருந்து ஆத்துரை வழியாக மன்சூராபாத் வரை செல்லும் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதின் காரணமாக ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 4.6 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 5.22 கோடியில் சீரமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இதற்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் ,கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், ராகவன் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.