திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிமலை பகுதியில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் 240 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் மாற்று கட்டிடம் அமைத்து தரக்கோரி முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்டிடப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் அமுதா அருணாச்சலம், துணைச் செயலாளர் செல்வம், போளூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருவிமலை கார்த்திகேயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சித்த மருத்துவர் பழனி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் உஷாநாதன், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் சம்பத், போளூர் நகர கழக செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் சேத்துப்பட்டு கிழக்கு ஸ்ரீதர், திருவண்ணாமலை வடக்கு சரவணன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தரணிதரன், முன்னாள் தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க தலைவர் பழனிராஜ் உள்ளிட்டஉள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர கிளை செயலாளர், நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.