இரண்டு பெண் கன்று குட்டிகளை ஈன்ற தாய் பசு

திருவண்ணாமலை மாவட்டம் சோ.கீழ்நாச்சிபட்டு அடுத்த வட அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் சுரேஷ். இவரது மனைவி யசோதா.

யசோதா அதே கிராமத்தில் இரண்டு பசு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு ஏற்கனவே தனித்தனியாக இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது.

தற்போது அதே பசு மாடு கர்ப்பம் தரித்து இன்று மாலை 3 மணி அளவில் ஒரே சமயத்தில் இரண்டு பெண் கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. பசுமாடு ஒரே சமயத்தில் இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தனித்தனியாக கன்று குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு கன்று குட்டிகளை அதிசயமாக பசுமாடு ஈன்று உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

Explore additional categories

Block title

error: Content is protected !!